Sunday, 18 January 2015

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரங்களும் பயன்களும் 1




ஓம் |
பூர் புவ ஸுவஹா |
தத் சவிதுர் வரேண்யம் |
பர்கோ தேவஸ்ய தீமஹி |
தியோ யோனஹ ப்ரசோதயாத் ||

இது வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் மந்திரம்|| இதை ஒரு குருவிடம் முறைப்படி சாபநிவர்த்தி செய்து உபதேசம் பெற்றுத்தான் ஜெபிக்கவேண்டும்.

இது தவிர ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனியே காயத்ரி மந்திரங்கள் .உள்ளன.அவற்றிற்கு மேற்கண்ட நியமங்கள் தேவை இல்லை.யாவரும் ஜெபிக்கலாம்.அசைவம்  சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால் 3 நாட்கள் கழித்து ஜெபிக்கவும் .

1.ஸ்ரீ மஹாகணபதி காயத்ரி மந்திரம்

ஓம் ஏகதந்தாய வித்மஹி |
வக்ரதுண்டாய தீமஹி |
தன்னோ தந்தி ப்ரசோதயாத் ||

இதை ஜெபித்து வர காரியத்தடைகள் நீங்கும்.எல்லா வளமும் நலமும் அமையும்.குறிப்பிட்ட காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன் இந்த மந்திரத்தை 3 முறை ஜெபித்து கணபதியை வேண்டிச் செல்ல காரிய சித்தி கிட்டும்.கடை,தொழில் இடங்களில் திறந்து அமரும் முன் இதை 3 தடவை ஜெபித்துக் கணபதியை வேண்டிய பின் அமரத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இதை ஒரு வியாழன் அல்லது ஞாயிற்றுக்கிழமை ஜெபிக்கத்  தொடங்கலாம்.


2.ஸ்ரீ ஷண்முக காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே |
மஹாசேனாய தீமஹி |
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத் ||


எதிரிகளின் தொல்லை நீங்கும்,அடிக்கடி பில்லி,சூனியம் ,திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஜெபித்து குங்குமம் அணிந்து வர பாதிப்புகள் ஏற்படாது.சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

3.ஸ்ரீ விஷ்ணு காயத்ரி 

ஓம் நாராயணாய வித்மஹே |
வாசுதேவாய தீமஹி |
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் ||

செல்வம்,செல்வாக்கு,கவர்ச்சி உண்டாகும்.

4.ஸ்ரீ சிவ காயத்ரி
ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹே |
மகாதேவாய தீமஹி |
தன்னோ ருத்ர ப்ரசோதயாத் ||

மங்களம் ,வீரம்,தைர்யம் ,ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்

5.ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் சதுர்முகாய வித்மஹே |
ஹம்சாரூடாய தீமஹி |
தன்னோ பிரம்ம ப்ரசோதயாத் ||

படைப்பாற்றல் ,ஞாபகசக்தி உண்டாகும்.

6.ஸ்ரீ ராம காயத்ரி

ஓம் தாசரதாய வித்மஹே |
சீதா வல்லபாய தீமஹி|
தன்னோ ராம ப்ரசோதயாத் ||

நன்னடத்தை ,நிதானம் ,ஹனுமான் அருள் உண்டாகும்.

7.ஸ்ரீ கிருஷ்ண  காயத்ரி

ஓம்  தேவகி நந்தனாய வித்மஹே |
வாசுதேவாய  தீமஹி|
தன்னோ  கிருஷ்ண ப்ரசோதயாத் ||

சர்வஜன ஆகர்ஷணம்,சந்தோசம்,சமயோசித புத்தி,குழந்தைபாக்கியம்  உண்டாகும்.
8.ஸ்ரீ இந்திர காயத்ரி
ஓம் சஹஸ்ரநேத்ராய வித்மஹே |
வஜ்ரஹஸ்தாய தீமஹி|
தன்னோ இந்திர ப்ரசோதயாத் ||

எந்த விதமான மந்திரிக,மனோரீதியான ,திருஷ்டி முதலான பாதிப்புகள் நீங்கும்.

9.ஸ்ரீ ஹனுமன் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே |
வாயுபுத்ராய தீமஹி|
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் ||
வீரியம்,தைர்யம்,புலனடக்கம்,சகலகலா பாண்டித்யம்,எடுத்த செயலைத்  திறம்படச் செய்யும் தன்மை உண்டாகும்.

10.ஸ்ரீ சூர்ய காயத்ரி

ஓம் பாஸ்கராய வித்மஹே |
திவாகராய தீமஹி|
தன்னோ சூர்ய ப்ரசோதயாத் ||
பார்வைக்கோளாறு,பித்ரு தோஷம் நீங்கும்.மேலாண்மைத்திறன்,பதவி உயர்வு,அரசு வேலை கிடைக்கும்.மிகுந்த மந்த புத்தி,மந்தமாக செயல்படுவார்கள் இதை தொடர்ந்து ஜெபித்து வரச் செயல்வேகம் உண்டாகும்.

11.ஸ்ரீ சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே |
ஹேமரூபாய தீமஹி|
தன்னோ சந்திர ப்ரசோதயாத் ||
நிம்மதி, அமைதி,அழகு,மனோசக்தி கிட்டும். அதிகம் கோபப்படுபவர்கள் இதை ஜெபித்து வர கோபம் குறையும்.இதை ஜெபித்து குங்குமம்,அலல்து மஞ்சள்  அணிந்து வர அழகு கூடும்.
12.ஸ்ரீ யமதர்மராஜா காயத்ரி

ஓம் காலரூபாய வித்மஹே |
தண்ட தராய தீமஹி|
தன்னோ யம ப்ரசோதயாத் || 
மரணபயம் நீங்கும்,அகால மரணம் ஏற்படாது.
13.ஸ்ரீ வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹே |
நீலபுருஷாய தீமஹி|
தன்னோ வருண ப்ரசோதயாத் || 
எண்ணம்,சொல்,செயல் இவற்றில் மென்மையான செயல்படும் குணம் உண்டாகும்.பலரும் ஒன்று கூடி வருண திசையான மேற்கு திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபித்து மழைபெய்ய வேண்டினால் மழை வரும். 
14.ஸ்ரீ  அக்னி காயத்ரி

ஓம் மஹாஜ்வாலாய வித்மஹே |
அக்னிதேவாய தீமஹி|
தன்னோ அக்னி ப்ரசோதயாத் || 
பெண்கள் குளித்து முடித்து சமையல் செய்ய அடுப்பைப் பற்ற வைக்கும் முன் இதை ஜெபித்து வர நெருப்பால் தீங்கு நேராது.

No comments:

Post a Comment