Sunday, 18 January 2015

ஸ்ரீ கருட மந்திரம்

ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க






                                                           ஸ்ரீ கருட காயத்ரி 

                                                ஓம் தத்புருஷாய வித்மஹே|
                                                ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
                                                தன்னோ கருட ப்ரசோதயாத் ||


ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.

இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும்  சுவாதி  நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.

சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி  மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.

ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .

ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.

 ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.
கருட உபாசனை  பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச்  சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.

ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார்.


கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி  மந்திரம் தான்.

கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-

ஓம் க்ஷிப ஸ்வாஹா 

ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.

கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.

பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு  வர மனோதிடம் உண்டாகும்.

கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.

கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-

1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி - மான் போன்ற பார்வை
3.தாரா - குருக்குப்பார்வை
4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ  -  பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா  -  கணவன் மனைவியிடையே நேசத்தைப்  பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை


இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?

முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.

ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ  கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.கால சர்ப்ப தோஷ  பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம்.


தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்.


பாம்பு கடித்து விஷம் தலைக்கேறினால் முகம் நிறம் மாறிவிடும் காப்பாற்றுவது கடினம்,விரைவில் மரணம் ஏற்படும் .அப்படி விஷத்தால் கடுமையாகப் பாதிப்பு அடைந்தவர்களைக் கூட எனது சிலம்ப ஆசான் கருட மந்திரப் பிரயோகத்தினால் விஷம் நீக்கி இயல்பு நிலை பெறச்செய்துள்ளார். இது நான் கண்ணாரக் கண்ட அனுபவம்.

அடிக்கடி பாம்பு,தேள் மற்றும் இதர விஷ ஜந்துக்களால் தொல்லை ஏற்பட்டால் அதற்கு சித்தர்கள் முறைப்படி மந்திரிக்க உடனே விஷம் இறங்கும்.மேலும் விஷ நிவாரண கருடரக்ஷை கட்டிக்கொள்ள விஷ ஜந்துக்கள் தீண்டாது.






No comments:

Post a Comment