Sunday, 18 January 2015

ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்

செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்

இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப்  போற்றி வழிபடப்படுகிறாள்.

மந்திர சாஸ்திர நூல்களான மந்திர மகாநிதி,குலார்ணவ தந்திரம் ,தத்த சம்ஹிதை முதலான எல்லா புகழ்பெற்ற நூல்களும் இவளை உயர்வாக குறிப்பிடுகின்றன.ஒவ்வொரு குறிப்பிட்ட பயனுக்கும் ஒரு தெய்வத்தை வணங்குவோம் ஆனால் இவளை வழிபட கல்வி,செல்வம்,வீரம்,என யாவும் கிட்டும்.இவள் ஒரு தெய்வமே .

இவளை உபாசிக்க இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது.பூர்வ ஜன்ம புண்யம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும்.
ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத்தின் போது அவர்களது குரு வசிஷ்டர் :- "இந்த உலகத்தில் செல்வம் இல்லாதவன் உறவினர்களால் கூட மதிக்கப்படமாட்டான் .உயர் புகழும் செல்வமும் பெற புவனேஸ்வரி வழிபாடே ஆகச் சிறந்தது.இவளை வழிபடுபவனும் அவன் தலைமுறைகளும், வறுமையைக் காணமாட்டார்கள் " என ஸ்ரீ ராமனிடம் கூறினார்.ராம ராஜ்ஜியம் செழிப்புடன் விளங்க ராமரின் புவனேஸ்வரி வழிபாடே காரணம்.

ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா துவாரகா நகரத்தைப் பெற உதவியதும் இவளை வழிபாட்ட பயனே .

எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.

நமது பூமியைப்போல் 224 உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி.புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

இவள் ரிஷிகளாலும்,தெய்வங்களாலும் பூஜிக்கப்படுபவள்.

இந்த மந்திர ஜெபத்தை பௌர்ணமி அன்று தொடங்கவும்.மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி  உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

நெய் விளக்கேற்றி  விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து ,வாழையிலையில் பச்சரிசி பரப்பி  அதில்  புவனேஸ்வரி யந்திரம் வைத்து  அந்த யந்திரத்தை குங்குமம்,ரோஜா இதழ்கள்  மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து  3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும்.இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும்.பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம்,பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.

இந்த ஜப முறை கலியுகத்தில் விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.

மந்திரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||

கடை,அலுவலகம் இவைகளில் ஹ்ரீம் என்ற மந்திரம் மேலே வரும்படி பெயர்பலகை வைக்க ,விசிட்டிங் கார்டிலும் மேலே ஹ்ரீம் என்று வரும்படி அடித்து விநியோகிக்க தொழில் அபிவிருத்தி,ஜன ஆகர்ஷணம்,தன ஆகர்ஷணம்  உண்டாகும்.தொழில் ஸ்தாபனங்கள் ,வீடு ,கடை இவற்றின் வாசலில் மஞ்சளால் ஹ்ரீம் என்று எழுதி அருகில் ஒரு ஸ்வஸ்திக் வரைந்து  வைக்க திருஷ்டி,எதிரிகளும் தீய எண்ணம் போன்றவை வேலை செய்யாது மேலும் அனேக அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

இது போக புவனேஸ்வரி மந்திரத்தின் முன்னும் பின்னும் அனேக பீஜங்களைச் சேர்த்துப் பல காரியங்களுக்கு ஜெபிக்கும் பிரயோக முறைகள் உள்ளன.அவற்றை விளக்கினால் பக்கம் அதிகமாகும்.விருப்பம் உள்ளவர்கள் உபதேசம் (தீக்ஷை) பெற்று ஜெபிக்கலாம்.


புவனேஸ்வரி பீஜம் வரையப்பட்ட யந்திரத்திற்கு மல்லிகை மலர்களால் புவனேஸ்வரி பீஜத்துடன் கூடிய சஹஸ்ரநாமங்களால் அர்ச்சனை செய்து அவள் பீஜ மந்திரத்தை 1008 ஆவர்த்தி ஜெபித்து அந்த யந்திரத்தை இடது கையில் கட்டிக்கொள்ள  கொடிய தரித்திரம் ,வறுமை ,நோய் இவற்றுடன் எப்போதும் துன்பங்களையே சந்தித்துவருவோரின் துயரங்களும்  நீங்கும்.  வேண்டுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.   

வேதம்,மந்திர சாஸ்திரத்தில் உள்ள யாரும் எளிதில் வெளியிடாத மறைக்கப்பட்ட பல பயனுள்ள மந்திரங்களை யாவரின் நலம் வேண்டியும் வெளியிடுகிறேன்.




வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

No comments:

Post a Comment