நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
தொடர்ந்த பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்
தாந்திரீக மற்றும் மந்திர சாஸ்திரத்தில் உள்ள மறைக்கப்பட்ட பல ரகசியங்களைப் பலரது நல்வாழ்விற்காக வெளியிடுகிறேன்.நான் வெளியிடும் பல மந்திரங்கள் மந்திர சாத்திர நூல்களில் உள்ளவையே இதுவரை தமிழில் புத்தகங்களில் வெளிவராதவை.சில மட்டும் வடமாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.பின்பற்றிப் பலனடையுங்கள்.
ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி ஒரு காலத்தில் மிகுந்த வறுமையை அனுபவித்து வந்தார் அதில் இருந்து விடுபடவும் ,மன்னர்களுக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் செல்வம் அளிக்கும் அளவுக்கு நிறைந்த செல்வவளம் உள்ளவராக விளங்கவும் அவருக்கு உதவியது இந்த மந்திரப் பிரயோகமே .
மேலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக் குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் .
பிரயோக முறை :-
1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.
2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.
3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.
4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
தியான ஸ்லோகம் :-
ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||
மூலமந்த்ரம் :-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |
ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||
No comments:
Post a Comment