பாடல் 22 சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறை
சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன் |
சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.
=================================================
பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர்
கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூறப்பா கோணத்தி லிருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே
மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜெனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள்குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் 1,5,9, ஆகிய கோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாகக் கேந்திரத்தில் அ·தாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருந்தால் கெடுபலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமிகடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது திசாபுத்திகளில் சொல்க. [எ-று]
இப்பாடலில் மேஷ இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர்
சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு
சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.
அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற
அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு
தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்
தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு
குள்ளப்பா குருமதியுங் கோணமேற
கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே
அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம்,உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக. [எ-று]
=================================================
பாடல் 25 - கடக இலக்கின ஜாதகர்
கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு |
கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது. இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது. [எ-று]
இப்பாடலில் கடக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர்
பாரப்பா சிங்கத்தில் செனித்த பேர்க்கு
பவுமனுமே திரிகோண மேறிநிற்க
சீரப்பா செம்பொன்னும் செல்வம் பூமி
சிவ சிவா சிக்குமடா சென்மனுக்கு
வீரப்பா மற்றயிடந் தனிலேநிற்க
வெகுமோசம் வருகுமடா வினையால் துன்பம்
கூறப்பா போகருடா கடாக்ஷத்தாலே
கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே.
சிம்மத்தில் பிறந்த அதாவது சிம்மலக்கின ஜாதகருக்கு செவ்வாய்க் கிரகமானது திரிகோண ஸ்தானத்தில் அமைந்தால் பெருஞ்சீர் வாய்க்கும்: செம்பொன் சேரும், செல்வமும் பூமியும் வாய்க்கும். இவையும் சிவபரம்பொருளின் பேரருளேயாகும். ஆனால் அத்திரிகோண ஸ்தானம் தவிர வேறிடத்தில் அமர்ந்திருப்பின், அவனால் மிகுந்த துன்பமும் செய்வினை முதலிய துன்பங்கள் ஏற்படுதலும் உண்டாகும். எனது சற்குருவாகிய போக மகாமுனிவரின் பேரருளால் கூறினேன். இக்குறிப்பினை அறிந்து ஜாதகனுக்குப் பலன் கூறுவாயாக. [எ-று]
இப்பாடலில் சிம்ம இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 27 கன்னி இலக்கின ஜாதகர்
குறித்திட்டேன் கன்னியிலே உதித்தபேர்க்கு |
கன்னியா லக்கினத்தில் உதித்த பேர்க்குக் குருவினால் வெகு துன்பம் வாய்த்திடுதல் உண்மையேயாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வர். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணியாகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.
இப்பாடலில் கன்னி இலக்கின ஜாதகர் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர்
கூறினேன் கோலுட யில்லு மாகில் |
இலக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான1,5,9-இல் சூரியன் நிற்கப் பிறந்தஜாதகணுக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால்கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவேயாகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெறஎடுத்துச் சொன்னேன். உணர்க! [எ-று]
இப்பாடலில் துலாம் இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர்
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற |
தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று]
இப்பாடலில் விருச்சிக இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்
பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு
பகருவேன் புந்தியுமே பகையுமாவர்
சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்
சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்
நீரப்பா நெடுமாலும் கோணமேற
நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்
ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே
அப்பனே புலிப்பாணி பாடினேனே
இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன். [எ-று]
இப்பாடலில் தனுசு இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 31 - மகர இலக்கின ஜாதகர்
அறைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அப்பனே மகரத்தில் உதித்தசேய்க்கு
திரந்திட்டேன் திரவியமும் மனையும் சேதம்
தேசமா ளரசனுட பகையுண்டாகும்.
குறைந்திட்டேன் கொடுஞ்சேயும் கோணமேற
கோவேறு கழுதைகளும் காவல் மெத்த
பரந்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
பதியறிந்து புவியோர்க்குப் பாடினேனே
இன்னுமொன்றையும் சொல்வேன்; நன்கு ஆராய்ந்து கேட்டுத் தெரிந்து கொள்வாயாக! மகர லக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு திரவிய நாசமும் மனை நாசமும் தேசத்தை ஆளும் மன்னரின் பகையுமுண்டாகும். ஆனால் சனி, சேய் [செவ்வாய்] ஆகிய கிரகங்கள் கோணத்தில் வீற்றிருந்தால் நிறைந்த பதி வாகனப் பிராப்தியும், பாதுகாவல் மிகுதியும் உண்டென்றும் எனது குருவான போகரின் கருணை கொண்டே கூறுகிற புலிப்பாணி ஆகிய என்றன் கருத்தை கிரக நிலவரத்தை ஆய்ந்தறிந்து கூறவேண்டியது நன்மை தரும்.
இப்பாடலில் மகர இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர்
பாடினேன் இன்னமொரு புதுமைகேளு |
நான் என்கவியில் பாடுகின்ற இன்னொரு புதுமையையும் மனங்கொண்டு கேட்பாயாக! மிக அழகிய கும்ப லக்கினத்தில் உதித்த மகனுக்கு அசுரர் தம் குருவான சுக்கிராச்சாரியார் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் உப்பரிகையும் சிறந்த மேடையும், இணையற்ற திரவியமும் செந்நெல் விளையும் நறுவிய பூமியமைதலும் நிச்சியமாக நேரும். மிகு தனவானாக சிறந்து வாழ்வான். ஆயினும் கேந்திர [1,4,7,10] நட்பு ஸ்தானங்களில் சுக்கிரபகவான் இருந்தால் மேற்குறித்த பலனுக்கு நேர்மாறான பலன்களைக் குறித்து கிரக நிலவரம் அறிந்து கூறுவாயாக! [எ-று]
இப்பாடலில் கும்ப இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
பாடல் 33 - மீன இலக்கின ஜாதகர்
கூறேநீ மீனத்தில் குழவிதோன்ற |
மீன இலக்கினத்தில் பிறந்த சாதகனுக்கு புதனும், சுக்கிரனும் தீமை செய்யும் கிரகங்களேயாகும். அவர்களால் வீடு, திரவியம், நிலபுலன் வாய்த்தல். நேர்தலும் அங்கத்தில் மச்சமுண்டாதலும், இவர்கள் திரிகோண ஸ்தானத்தில் நின்ற பேர்க்கு வாய்க்கும். இத்தகைய நற்பலன்களை கிரக நிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுக. என் குருநாதராகிய போகமா முனிவரது அருளாணையால் நான் அறிந்து கொண்ட வண்ணம் இச்சாதகன் எமலோகம் சேர்வது திண்ணம் என நான் உரைத்தேன். [எ-று]
இப்பாடலில் மீன இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
=================================================
No comments:
Post a Comment