Saturday, 24 January 2015

கணபதி மந்திரம்

விநாயகர்
விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்துபொருள் : கொடிய துன்பங்களை வேரறுப்பவர், பொருள் பற்றைத் தணிவிப்பவர், வானுலகிற்கும் மண்ணுலகிற்கும் தலைவர். இத்தன்மையினரான விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம்.


எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற
 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

வல்லப மஹா கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர
வரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்
ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா

வ்ராத கணபதி மந்திரம்
ஓம் நமோ வ்ராத பதயே நமோ கணபதயே நம:
ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய
ஏகதந்தாய விக்னவிநாசினே சிவ சுதாய
வரத மூர்த்தயே நமோ நம:

சக்தி விநாயக மந்திரம்
 
ஓம் ஹ்ரீம் க்ரீம் கணபதயே நம:

விநாயகர் காயத்திரி
ஓம் தத்புருஷாய வித்மஹே; வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி: ப்ரசோதயாத்

லட்சுமி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

சர்வ வித்யா கணபதி மந்திரம்
தினமும் காலையில் 108 முறை சொல்ல, கல்வி அறிவு வளர்ச்சி பெறும். அறிவு விருத்தியாகும். தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
ஐம் ப்ளூம் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா

சகல காரிய சித்திக்கான எளிய முறை:
செய்யும் காரியங்களில் தடைகள் விலக
 
மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

No comments:

Post a Comment