மறைவு ஸ்தானம் தரும் யோக பலன்கள் !
அண்ணே,
எனது கேள்விக்காகத் தாங்கள் நீண்ட ஒரு விளக்கம் தந்த மேன்மைக்கு நன்றி!. இது போல் ஒரு வலைப்பூவில் பாதகஸ்தானம் பற்றிக் கேள்வியெழுப்பியிருந்தேன். அதற்கு அந்த நண்பர் நீங்கள் சொல்வது போல் பாதகஸ்தானம்,பாதகஸ்தான அதிபதி என்பது பற்றியெல்லாம் புரதான ஜோதிட நூல்களில் கூட விளக்கம் இல்லை. நீங்கள் தேவையில்லாத விஷயத்தைப் பற்றிக் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தார்.அவர் சொன்னது மறைவு ஸ்தானங்களை(6,8,12) மட்டும் பார்த்தால் போதும் இது ஒன்றும் அத்தனை முக்கியத்துவமில்லாதது என்று கூறியிருந்தார்.அதனால் தான் நான் தங்களிடம் என் மனதில் தோன்றிய ஐயத்தைக் குறித்து வினவினேன். நான் என் நண்பன் ஜாதகத்திலும்,என் தாயார் ஜாதகத்திலும் பாதகாதிபதிகளின் திசை நடந்த போது அவர்கள்பட்ட மனவேதனையை கேட்டும்,கண்டும் இருந்ததால் இதன் பாதகம் நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து அறியலானேன்.தங்களின் விளக்கத்தால் தெளிவும் அடைந்தேன்.
பல இளம் ஜோதிட ஆராதகர்கள் மறைவு ஸ்தானத்தைப் பற்றிக்கொண்டு
இறங்க மறுக்கின்றனர்.பாதகஸ்தானமா? என்று எதிர்கேள்வி கேட்டு நமது மண்டையைக்காய வைக்கின்றனர்,அவர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படும்.
நன்றிகள் பல!!!
சந்தோசம்
தம்பி இந்த இடத்தில் சிறு விளக்கம் தர கடமைப்பட்டு இருக்கிறேன் பாதக
ஸ்தானத்தை பற்றி விளக்கம் சில பழமையான ஜோதிட நூல்களில் இருக்கிறது ஆனால்
அதைபற்றி பல ஜோதிடர்களுக்கு நிச்சயம் தெரியாது காரணம் தனக்கு எல்லாமே
தெரியும் என்ற எண்ணமும் சரியான புரிதல் இல்லாதது மட்டுமே மேலும் பொதுவான
ஜோதிட பலன்களை படித்து விட்டு ஜோதிடம் சொல்லும் நபர்களுக்கு இதை பற்றிய
ஆராய்ச்சியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை அதை பற்றி நமக்கு என்ன கவலை அவர்கள்
அனைவரும் தனக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே ஜோதிடத்தை
பார்க்கின்றனர் ஆனால் நாமோ ஜோதிடகலையை இறையருள் நமக்கு தந்த ஒரு பொக்கிஷமாக
பார்க்கிறோம் , இந்த பொக்கிஷத்தை சரியாக பயன்படுத்தினால் மனிதகுலம்
நிச்சயம் வாழ்க்கையில் பல நன்மைகளை பெரும் என்பதே உண்மை, தம்மை நாடி வரும்
அன்பர்களுக்கு சரியான வாழ்க்கை பாதையினை ஜோதிட கணிதம் கொண்டு தெளிவாக
தெரிந்து உள்ளது உள்ள படி சொன்னாலே மக்கள் அதன் படி தெளிவாக புரிதலுடன்
வாழ்க்கையை சிறப்பாக நடத்துவார்கள் என்பது முற்றியும் சாத்திய படும் ஒரு
விஷயமே .
பொதுவாக
ஒரு ஜாதக அமைப்பில் மறைவு ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு
மற்றும் பனிரெண்டாம் பாவக வழியில் இருந்து கெடுதல் மட்டுமே நடக்கும் என்பது
பாரம்பரிய ஜோதிட முறையில் சொல்லப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது, மேலும்
இந்த பாவகத்திர்க்கு உட்பட்ட அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் நடந்தால்
தீமையை மட்டுமே செய்யும் என்பது பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது ,
உண்மையில் மறைவு
ஸ்தானம் என குறிப்பிட படும் , ஆறு ,எட்டு மற்றும் பனிரெண்டாம்
பாவகத்திர்க்கும் , லக்கினம் முதல் 12 பாவகத்திர்க்கும் இரண்டு வித குணம்
உண்டு , சுய ஜாதகத்தில் மேற்கண்ட மறைவு ஸ்தானங்கள் மற்றும் மறைவு
ஸ்தானங்களுக்கு அதிபதிகளின் திசைகள் நல்ல பாவகங்களுடன் தொடர்பு பெற்று
பலனை நடத்தினால் நன்மையை தரும் என்று எத்தனை ஜோதிடர்களுக்கு தெரியும் ,
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் மேலும் மறைவு ஸ்தனங்களும் ஒரு ஜாதகனுக்கு
நன்மையை தரும் எனும் உண்மை எத்தனை ஜோதிடர்கள் ஜோதிட கணிதம் கொண்டு
அறிந்திருக்க கூடும் , மறைவு ஸ்தானங்கள் நல்ல நிலையில் இருந்து இதன்
அதிபதிகளின் திசை மற்றும் புத்திகள் தரும் பலன்களை பற்றி இனி பார்ப்போம் .
ஆறாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :
திசை
முழுவது சிறு சிறு அதிர்ஷ்டங்களை ஜாதகர் பெற்று கொண்டே இருப்பார் , உடலில்
ஏற்ப்படும் உடல் நல குறைவுகள் , விரைவான குணம் பெரும் தன்மையை தரும் ,
கடன் பெறுவதாலும் , கொடுப்பதாலும் ஜாதகர் நன்மை பெறுவார் , எதிரிகளின்
சொத்து ஜாதகருக்கு கிடைக்கும் , எதிரிகள் கூட நண்பர்கள் ஆகும் சூழ்நிலை
உண்டாகும் , எதிரிகளின் செயல் ஜாதகருக்கு சாதகமாக மாறிவிடும் , ஜாதகரை
எதிர்ப்பவர்கள் தோல்வியை தழுவ வேண்டி வரும், தொழில் முன்னேற்றம் என்பது மிக
விரைவானதாக இருக்கும் , ஜாதகரின் வளர்ச்சி என்பது எவராலும் அறிந்து கொள்ள
இயலாத அளவில் இருக்கும், மேலும் ஜாதகர் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும்
வெற்றி பெரும் , தனது தாய் மாமன் வழியில் இருந்து அதிக நன்மை பெரும் யோகம்
உண்டாகும் , கோர்ட் கேசு ஆகியவற்றில் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்புகள்
கிடைக்கும், சுய ஜாதகத்தில் ஆறாம் வீடு வலிமை பெற்றால் மேற்கண்ட நன்மைகள்
ஜாதகர் அனுபவிக்கும் யோகம் உண்டாகும் .
எட்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :
திடீர்
அதிர்ஷ்டம் மூலம் ஜாதகருக்கு குபேர சம்பத்து உண்டாகும், லாட்டரி , புதையல்
போன்ற அதிர்ஷ்டங்கள் கிடைக்க பெறுவார் , குறிப்பாக ஆயுள் காப்பீடு மற்றும்
இன்சுரன்ஸ் துறைகளில் ஜாதகர் கொடி கட்டி பறக்கும் அளவிற்கு வருமான
வாய்ப்புகளை பெறுவார் , மேலும் திடீர் பொருள் வரவும் சொத்து சுக
சேர்க்கையும் , எதிர்பாராத பண வரவும் , நிலபுலன் சேர்க்கையும் நிச்சயம்
ஏற்ப்படும் , சுய ஜாதகத்தில் எட்டம் வீடு நல்ல நிலையில் இருந்து இந்த
வீட்டின் பலன் நடந்தால் மேற்கண்ட நன்மையான பலன்கள் எல்லாம் குறுகிய
காலத்தில் நிச்சயம் நடைபெறும் .
பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் நன்மை :
ஜாதகர்
செய்த சிறு முதலீடு மூலம் மிகப்பெரிய வருமானத்தை பெரும் யோகம் உண்டாகும் ,
தொழில் மற்றும் நிலம் நகை வண்டி வாகனம் போன்ற விஷயங்களில் முதலீடு
செய்வதால் கிடைக்கும் அபரிவிதமான செல்வாக்கு மற்றும் பண வரவு , ஆன்மீக
வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி , இறை நிலை பற்றிய தெளிவு தன்னை பற்றி
தெரிந்து கொள்ளும் ஆற்றல் , மற்றவர்களின் மன நிலையை தெளிவாக தெரிந்து
கொள்ளும் சிறப்பு தகுதிகள் , மன தத்துவ நிபுணர் ஆகும் யோகம் , ஜாதகர்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மன எண்ண ஆற்றல் மூலம் உலகில் நடப்பவைகளை
தெரிந்து கொள்ளும் ஆற்றல் , முன்ஜென்ம நினைவுகள் , கர்ம வினை பதிவின்
தன்மைகள் , கருமையத்தின் தன்மை , இறை நிலைக்கும் ஜாதகருக்கும் உள்ள தொடர்பு
, போன்ற விஷயங்களும் , இதனால் கிடைக்கும் நன்மைகளையும் ஜாதகர் பெறுவது பனிரெண்டாம் வீடு மற்றும் அதிபதி நல்ல நிலையில் இருந்து அதன் திசை நடந்தால் ஜாதகர் பெரும் யோகம் உண்டாகும் .
இதுவே
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீட்டு மற்றும் அதன்
அதிபதியின் திசை நடக்கும் பொழுது , பூர்வ புண்ணியம் பாதக ஸ்தானதுடன்
சம்பந்த பெற்று இருந்தால் , ஜாதகரை பூர்வீகத்தை விட்டே வெகு தொலைவு சென்று
பரதேஷ ஜீவனம் செய்ய வைத்து விடும் எனவே ஒவ்வொரு பாவகதிர்க்கும் நன்மை தீமை
செய்யும் பலம் உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகிறது .
No comments:
Post a Comment